தஞ்சாவூர் செக்கெண்ணெய்
தோன்றிய வரலாறு...
இது என் குடும்பத்தினருக்காக, தொடங்கிய
முயற்சி... எதிர்காலத் தலைமுறை நலமாக வாழவேண்டும்... நம் பிள்ளைகளுக்கு நாம்
நல்லனவற்றைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்த எண்ணெய் ஆட்டும்
முயற்சி.
நாம் நம் பாரம்பரியத்தை
மறந்ததால் பல்வேறு இன்னல்களை அடைந்து கொண்டுள்ளோம்... வைத்தியனுக்குக் கொடுப்பதை
வாணியனுக்குக் கொடு என்பதை மறந்தோம். வாணியனுக்குக் கொடுப்பதை மறந்ததால் இன்று
வைத்தியனுக்கு வாரி வழங்கிக் கொண்டுள்ளோம்.
இந்த நிலையை
மாற்றவேண்டும் என்று நெடுநாளாக எண்ணிக் கொண்டிருந்தேன்... இன்று நிறைவேறியது.
தஞ்சாவூர் செக்கு எண்ணெய். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். ஆம் என்
குடும்பத்திற்காகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகத் தயாரிக்கப்பட்டதுதான் இந்த
நல்லெண்ணெயும், தேங்காயெண்ணெயும்.
என்னுடைய நண்பர்
செந்தில் வீட்டில் விளைந்த பல ஆண்டுகளாக செயற்கை உரம் எதுவும் போடாமல் விளைந்த
தேங்காய்க் கொப்பரையில் பார்த்துப் பார்த்துப் பக்குவமாகக் காயவைத்து தேங்காயெண்ணெய்
ஆட்டி எடுக்கப்பட்டது.
சேலத்தில் நண்பர்
செல்வமுரளியிடமிருந்து தரமான நல்ல எள் வாங்கி ஆட்டி எடுக்கப்பட்டது நல்லெண்ணெய்.
எல்லாவற்றையும்விட
இணையத்தில் நான் பார்த்த மற்ற அனைவரையும் விட எவ்வளவு விலை குறைவாகக் கொடுக்க
முடியுமோ அந்த அளவு குறைவாகக் கொடுக்க முயன்றுள்ளேன்.
இது என்னுடைய முதல்
முயற்சி... உங்களின் மேலான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இறங்கியுள்ளேன்.
அடுத்தமுறை கட்டாயம் இதைவிட
இன்னும் குறைவான விலையில் கொடுப்பேன் என்று உறுதிகூறி உங்களின் மேலான ஆதரவிற்கு
நன்றி கூறிக் கொள்கின்றேன்.
விலைவிவரம் அனுப்பும்
செலவு சேர்த்து.
நல்லெண்ணெய் கருப்பட்டி
கலந்து ஆட்டியது 1லி = ரூ.295/-
தேங்காய் எண்ணெய் 1லி =
ரூ.200/-
---------------------------------
தஞ்சாவூரில் உள்ளவர்கள்
நேரில் வந்து வாங்கிக் கொண்டால் விலையில் பத்து ரூபாய் குறைவு.
பணம் அனுப்ப வேண்டிய
வங்கி விவரம்.
ICICI BANK SAVINGS A/C
NO 612801076639
Thanjavur IFSC Code:
ICIC0006128
(தஞ்சாவூர் தவிர்த்த
பிற ஊரில் உள்ளவர்கள் குறைந்தது மூன்று அல்லது ஐந்து லிட்டராக வாங்கினால்
அனுப்புவது நல்லது. ஒரு லிட்டர் என்றால் கொரியர்காரர்கள் பொறுப்பில்லாமல் தூக்கிப்
போட்டுவிடுகின்றனர்.) (அண்டை
மாநிலங்களுக்கு ஒரு லிட்டர் அல்லது ஒரு கிலோவுக்கு கூரியர் செலவு 30 ரூபாய் கூடுதலாக வரும்)
2 comments:
தஞ்சாவூரில் கிடைக்கும் முகவரி அல்லது தொடர்பு எண் கிடைத்தால் வாங்குவதற்கு உதவியாய் அமையும்.
9786543523 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
Post a Comment